முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதியை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமின் பெற்ற தயாசங்கர் சிங் விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ : பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை அவதூறாக பேசிய வழக்கில் கைதான தயாசங்கர் சிங் நேற்று சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை ஆனார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை அவதூறாக பேசியதாக கூறப்பட்ட உத்தரபிரதேச பா.ஜனதா துணைத் தலைவர் தயாசங்கர் சிங் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது உ.பி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பீகார் மாநிலம் பக்சார் நகரில் தலைமறைவாக இருந்த அவரை கடந்த 30-ந்தேதி போலீசார் கைது செய்து உத்தரபிரதேசத்தின் மாவ் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்ககோரி மாவ் மாவட்ட செசன்சு கோர்ட்டில் தயாசங்கர் சிங் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் 4-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, மாவ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தயாசங்கர் சிங் நேற்று விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் காத்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்