முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்ப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

செயிண்ட் லூகாஸ் : மே.இ.தீவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு டாஸ் வென்று இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. இதைதொடர்ந்து இந்திய அணியின் லோகேஷ் ராகுல், சிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சிகர் தவான் 1 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 3 ரன்களுடன் நடையை கட்டினார். மறுபக்கம் நிதானமாக ஆடிய ராகுல் 50 ரன்களை சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரஹானே 35 ரன்கள், ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், அஸ்வின் 75 ரன்கள் மற்றும் விர்த்திமான் சஹா 46 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்துள்ளது. மே.இ.தீவு சார்பாக ஜோசப், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகளும், கேப்ரியல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்