முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசேன் போல்ட் முன்னேறினார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோ டி ஜெனிரோ :  ரியோ ஒலிம்பிக் தடகளத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், ஜமைக்காவின் உசைன் போல்ட் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்,ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தடகளப் போட்டியாகும்.

பெய்ஜிங்,மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வெற்றி பெற்றிருந்தார். இதனால் தற்போது ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . எனவேஇந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது.

ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்திற்கான தகுதிச்சுற்றுப் போட்டி 8 ஹீட்டாக (பிரிவு) நடைபெற்றது. ஒவ்வொரு ஹீ்ட்டிலும் தலா 9 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.7-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த உசைன் போல்ட் பந்தய தூரத்தை 10.07 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

பகரைன் வீரர் அன்ட்ரீவ் பிஷெர் 10.12 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிக்கும் அவர் முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்