முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3வது முறை தங்கம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோடி ஜெனிரோ  - ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் 100 மீட்டர் அதி வேக ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் அவர் அவர் தொடர்ந்து பெறும் 3வது தங்கப்பதக்கம் இதுவாகும். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல சாதனைகள் நீச்சல், தட களப்போட்டிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

ஒலிம்பிக்கின் 9வது நாளன்று  ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் 100 மீட்டர்  அதி வேக ஓட்டப்பந்தயத்தில் 9.81 வினாடியில் ஓடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஒலிம்பிக்கில் அவர் தொடர்ந்து பெறும் 3வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவருக்கு சவால் எழுப்பிய அமெரிக்க வீரர் ஜஸ்டின்  காட்லின் 9.89வினாடியில் ஓடி இரண்டாவது இடத்தையே பெற முடிந்தது.  

பிரிட்டனின் ஜஸ்டின் ரோஸ் ஒலிம்பிக் கோல்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த 112 ஆண்டு சரித்திரத்தில் பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் கோல்ப் பதக்கம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.இந்த போட்டியில் சுவிடனின் ஹென்ரிக் ஸ்டீவன்சனை தோற்கடித்து பிரிட்டன் வீரர் ஜஸ்டின் வெற்றி வாகை சூடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்