முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முன்னேறினார் .

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

 ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கே.ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் நேற்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் வீரர்  ஜான் ஜார்கன்சனை தோற்கடித்தார். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் கடந்த 10 நாட்களாக 31வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206நாடுகளைச் சேர்ந்த 10ஆயிரத்து 500 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா 118 வீரர்-வீராங்கனைகளுடன் களம் இறங்கியது.  இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர் பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2-வது ஆட்டத்திலேயே தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை பறிகொடுத்தார்.

அதேப்போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டென்னிஸ் வீரர்கள் போபண்ணா, லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, திரிபுரா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கரம்கர் ஆகியோர் தோல்வியை தழுவினர். இந்த நிலையில்  10-வது நாள் போட்டியான நேற்று இந்திய பேட்மிண்டன் வீரர் கே.ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடி கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் டென்மார்க் வீரர்  ஜான் ஜார்கன்சனை தோற்கடித்தார். லலிதா பாபருக்கு 10-வது இடம்: ஒலிம்பிக் 3ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் மகாராஷ்டிரா வீராங்கனை லலிதா பாபர் 10வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஸ்டீபிள் சேஸ் போட்டி என்பது 38 தடைகளையும், 7 நீர் நிலைகளையும் கடந்து ஓடி வருவது ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்