முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருப்பு - உணவு தானியப்பொருட்கள் விலை உயர்வால் பண வீக்கம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  -  பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பால் உணவு தானிய மொத்த விலை வாசி கடுமையாக அதிகரித்தது. கடந்த 23 மாதங்களுக்கு முந்தைய விலை உயர்வு தற்போது ஏற்பட்டுள்ளது.  மொத்த விற்பனை விலை வருடாந்திர விலை வாசி அடிப்படை நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  உணவு தானிய மொத்த விற்பனை  விலை வாசி உயர்வு 3.74சத வீதமாக இருந்தது. கடந்த மாதம் இந்த மொத்த விற்பனை பண வீக்க விகிதம்  3.55 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஜூலை மாதம் காய்கறிகள் விலை 28.05சதவீதமாக அதிகரித்து இருந்தது.உருளைக்கிழங்கு அன்றாடம் உணவில் பயன்படுத்தும் காய்கறியாக உள்ளது.

இந்த காய் கறி விலை கடந்த மாதத்தில் 58.78சதவீதமாக அதிகரித்தது. சர்க்கரை விலை 32.33 சதவீதமும் பழங்கள் விலை 17.30சதவீதமும் அதிகரித்தது. வெங்காயம் விலை மைனஸ் 36.29சதவீதமாக இருந்தது. பெடரோல் விலை உயர்வு  மைனஸ் 10.30சதவீதமாக இருந்தது. உணவுத்தானிய சில்லறை விற்பனையிலும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மார்ச் 2017ம் ஆண்டு கால கட்டத்தில் பண வீக்க விகிதத்தை 5சதவீதத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்