முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பதக்க கணக்கை துவக்கி வைத்தார் சாக்ஷி மாலிக் - நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோ : ரியோ ஒலிம்பிக், மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை துவக்கி வைத்துள்ளார். இது ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம். இந்த வெற்றி மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின், பதக்க ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளார் சாக்ஷி. நாடு முழுவதும் இந்த நிகழ்வு ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு தரப்பிலிருந்து இவருக்கு பாராட்டு குவிகின்றது.

58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.  முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை வேலரியா கோப்லோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் "ரெபிசாஜ்" சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதியை பெற்றார்.

மல்யுத்த வீரங்கனை சாக்‌ஷி மாலிக் அரியான மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்