முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோடி ஜெனிரோ : ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். அவர் நேற்று நடந்த அரை இறுதிப்போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நோசோமி ஓகுராவை 21-19, 21-10 செட் கணக்கில் வீழ்த்தினார். இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறி இருப்பதன் மூலம் அவர் இந்திய அணியினரையும், இந்திய மக்களையும் மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் போட்டி கடந்த 13 நாட்களாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பதக்க கணக்கை துவக்கி வைத்தார்.

சாக்‌ஷியின் வெற்றியை நாடே கொண்டாடி மகிழ்ந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று அரை இறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடி ஜப்பானிய வீராங்கனை நேசோமி  ஓகுராவை அதிரடியாக ஆடி தோற்கடித்தார். தோல்வியை தழுவிய ஜப்பானிய வீராங்கனை உலக பேட்மிண்டன் அரங்கில் 6வது இடத்தில் இருப்பவர் ஆவார்.

சிந்து 21-19, 21-10 செட் கணக்கில் ஜப்பானிய வீராங்கனை நோசோமியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை  கரோலினா மரினுடன் சிந்து இன்று மோதுகிறார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்த வெற்றி மூலம் சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அவர் இறுதிப்போட்டியில் ஜெயித்து சாதனை படைத்தால், அவர் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைப்பார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை சிந்து ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago