முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய விமானம்: ஏர்லேண்டர்-10 சோதனை ஓட்டம் வெற்றி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  - உலகின் மிகப்பெரிய விமானமான ’ஏர்லேண்டர் 10’ வெற்றிகரமாக தனது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. 302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் பிரிட்டன் நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது. சாதாரண ஹெலிகாப்டரைப் போல் எவ்வித தரையிலும் இறங்கும் ஆற்றல் கொண்ட இந்த விமானம் மணிக்கு 92 மைல் வேகத்தில் சுமார் 9 ஆயிரம் டன் சரக்குகளை சுமந்தபடி தொடர்ந்து 5 நாட்கள்வரை பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக இந்த விமானத்தை வடிவமைக்கும் திட்டத்தை செயல்படுத்திய அமெரிக்கா, பின்னர் நிதி பற்றாக்குறையால் அந்த முயற்சியை கிடப்பில் போட்டது. இதையடுத்து, பிரிட்டன் நாட்டை சேர்ந்த ’ஹைபிரிட் ஏர் வெஹிகில்ஸ்’ என்ற நிறுவனம் இந்த கனவை நனவாக்கியுள்ளது.

உள்நாட்டு நேரப்படி புதன்கிழமை முன்னிரவு 7.40 மணியளவில் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பெட்போர்ட்ஷைர் பகுதியில் இருந்து தனது கனமான இடுப்பை அசைத்தபடி இந்த விமானம் புறப்பட்டு சென்ற காட்சியை கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்ட ’ஏர்லேண்டர் 10’ விமானம் நான்கு என்ஜின்களை கொண்டது. தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்பட்டாலும், இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago