முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்லாண்டிக்கை உலுக்கிய நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

கிங் எட்வர்டு பாயின்ட்  - அட்லாண்டிக்கில் நேற்று 7.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஆட்டம்கண்டன. தெற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ளது பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விக் தீவுகள். இப்பகுதியில் நேற்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையம் உள்ள தீவில் இருந்து 316 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago