முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 முறை ஹாட்ரிக் தங்கப்பதக்கம் கைப்பற்றி ஒலிம்பிக் சாதனை

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோடி ஜெனிரோ  - ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் இடம் பெற்றிருந்த ஜமைக்காவின் 4x100  மீட்டர் தொடர் ஓட்ட அணி தங்கம் வென்றது. இதன் மூலம் உலகின் அதி வேக ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 3 ஹாட்ரிக் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

 ரியோடி ஜெனிரோவில் கடந்த 15 நாட்களாக 31வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச்சேர்ந்த 10ஆயிரத்து 500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் 118 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்  வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை பெற்று தந்தார். அவரைத் தொடர்ந்து ஹைதராபாத் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து  வெள்ளி பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் சாதனை படைத்தார். அவர் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 இந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர்  பெல்ப்ஸ் தங்க பதக்க குவிப்பில் உலக நாடுகளை வியப்புடன் திரும்பி பார்க்க வைத்தார். அவரைப்போன்று ஜமைக்காவின் அதி வேக ஓட்ட வீரர் உசேன் போல்ட் அதி  வேக ஓட்டப்பந்தயமான 100 மீட்டர், 200 மீட்டர் ,4X100  மீட்டர் தொடர் ஓட்டம் என இந்த ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் குவித்து ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். அவர் கடந் த 2008 ம் ஆண்டு பெய்ஜிங்(சீனா) 2012ம் ஆண்டு லண்டன் (இங்கிலாந்து) தற்போதைய ரியோ(பிரேசில்) ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் தெடர்ந்து தங்கம் என 3 ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக 100 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். அதேப்போன்று அவர் 200 மீட்டர் மற்றும்  தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் 3 ஒலிம்பிக்குகளில் ஹாட்ரிக் தங்கம் பெற்று உலக விளையாட்டு அரங்கில் அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துள்ளார்.

 அவர் நேற்று 4x100 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் ஜமைக்கா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரது அணி நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 37.27 வினாடிகளில் ஓடி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. உசேன் போல்ட் தனது ஜமைக்கா அணிக்காக காற்றில் சீறி பாய்ந்து வெற்றியை தேடித்தந்தார். தொடர் ஓட்டத்தில் .33 வினாடிகள் தாமதாக ஓடி வந்த ஜப்பான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. அமெரிக்க தொடர் ஓட்ட அணி 3வது இடத்தையே பெற முடிந்தது.இருப்பினும் அந்த அணி வீரர் தொடர் ஓட்ட பட்டனை சக வீரரிடம் முன்கூட்டியே அளித்ததால் அந்த அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் கனடா அணிக்கு 3வது இடம் உறுதிபடுத்தப்பட்டு வெண்கலப்பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago