முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளேன் : ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து பேட்டி

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியேடி ஜெனிரோ  -  ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளேன் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்தார். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி தற்போது நடந்து வருகிறது . கடந்த 1 5 நாட்களாக நடந்து வரும் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் வெண்கலப்பதக்கத்தையும், பேட்மிண்டன் போட்டியில் ஹைதராபாத் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.   ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பி.வி.சிந்து பெற்றிருக்கிறார். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில்,

 ரியோ ஒலிம்பிக்கில் உலக நம்பர் ஓன் பேட்மிண்டன் வீராங்கனையான கரோலினா மரினை எதிர்த்து மோதியபோது,கடுமையாக போராடினேன். இறுதிப்போட்டியில் கரோலினா மிக சிறப்பாக ஆடினார். அவரது அற்புதமான ஆட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.எனக்கு இந்த ஒலிம்பிக்கில் இரண்டாவது இடம் கிடைத்ததன் மூலம் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதனால் நான் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளேன். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறியுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக்கிற்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியை எனது பயிற்சியாளர் மற்றும் பெற்றோருக்கு சமர்பிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்