முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக் காலம் செப்டம்பர் 4-ந் தேதி முடிவடைகிறது. அவருக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரகுராம் ராஜனும் தாம் பதவியில் தொடர விருப்பமில்லை எனக் கூறியிருந்தார். இதனால் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் தொடர்பாக பல்வேறு யூகங்கள் கிளம்பின. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை கவர்னரான உர்ஜித் படேல், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 52 வயதாகும் உர்ஜித் படேல் அடுத்த 4 ஆண்டுகாலத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகிப்பார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்