முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

360 டிகிரி கோணத்தில் செவ்வாயை படம் பிடித்த நாசாவின் கியூரியாசிட்டி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

நாசா : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் இயந்திரம் 360 டிகிரி கோணத்தில் சுழன்றபடி நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை படம்பிடித்துள்ளது.

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் இருக்கிறதா? என ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சார்பில் கடந்த 2011 நவம்பர் 6-ம் தேதி கியூரியோசிட்டி என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

9 மாத நீண்ட பயணத்துக்கு பின் இந்த விண்கலம் 2012, ஆகஸ்ட் 6-ம் தேதி செவ்வாயின் காலே கிரேட்டர் பகுதியில் தரையிறங்கியது. விண்கலத்தின் லேண்ட் ரோவர் என்ற இயந்திரம் மூலம் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பம், பாறைகள், குன்றுகள், மண் வளம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செவ்வாயில் தரையிறங்கிய 4-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த 5-ம் தேதி கியூரியாசிட்டியின் ரோவர் இயந்திரம் செவ்வாய் கிரகத்தின் நான்குபுறங்களையும் 360 டிகிரி கோணத்தில் சுழன்று படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. பனோரமிக் பாணியில் எடுக்கப்பட்ட 130-க்கும் மேற்பட்ட படங்களை ரோவர் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த மஸ்ட் கேமிரா கச்சிதமாக படம்பிடித்துள்ளது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் பங்கெடுத்து 3 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி புரூஸ் முர்ரேவின் நினைவாக, ரோவர் இயந்திரம் தரையிறங்கிய பகுதிக்கு முர்ரே பட்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியை தான் ரோவர் இயந்திரம் படம்பிடித்து அனுப்பி வைத்துள்ளது. சுற்றிலும் பாறை மற்றும் குன்றாக காட்சியளிக்கும் அந்த படங்கள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்