முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது - பிரான்ஸ் நாடு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை :  நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதை இதற்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 1977ம் ஆண்டு பெற்றிருந்தார். 39 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விருதை தற்போது கமல்ஹாசன் பெறுகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் நடித்து சாதனை படைத்து வரும் நடிகர் கமல்ஹாசன். அவர் முதன் முதலாக களத்தூர் கண்ணம்மா படத்தில் 5வயது சிறுவனாக இருக்கும் போதே தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆனந்த ஜோதி படத்திலும், சிவாஜி கணேசனின் பார்த்தால் பசி தீரும் படத்திலும் கமல்ஹாசன் சிறு வனாக இருக்கும் போது நடித்தார்.  களத்தூர் கண்ணம்மாபடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தார். அவரது சாதனை படங்களாக அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன்,கல்யாண ராமன், அவ்வை சண்முகி, நாயகன், குணா,  விஸ்வரூபம்,  ஆகியவை திகழ்ந்தன.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளை கமலஹாசன் பெற்றுள்ளார். .இதுதவிர தேசிய விருது 3 முறையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது.

சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்