முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தினவிழாவில் பேசியபோது மேடையில் மயங்கி விழுந்த சிங்கப்பூர் பிரதமர்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்  - தேசிய தினவிழாவில் பேசிய போது சிங்கப்பூர் பிரதமர் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கப்பூர் பிரதமராக லீ சியென் லூங் பதவி வகிக்கிறார் இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் சிங்கப்பூரின் தேசிய தினவிழா நேற்று முன்தினம் 1கொண்டாடப்பட்டது. அதையொட்டி பிரமாண்ட பேரணி நடந்தது. முடிவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் லீ சீயென் லூங் சிறப்புரை ஆற்றினார். இவர் பல மொழிகளிலும் 2 மணிநேரத்துக்கும் மேலாக பேசினார். மிக ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மேடையில் மயங்கி சரிந்தார். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. நிகழ்ச்சியில்கலந்து கொண்ட பொதுமக்கள் பதை பதைப்புக்குள்ளானார்கள்.

இதற்கிடையே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு 90 நிமிடம் கழித்து மீண்டும் பிரதமர் லீ விழா மேடைக்கு வந்தார். அப்போதும் விழாவில் கலந்து கொண்ட மக்கள் கலைந்து செல்லாமல் காத்திருந்தனர். அவர்கள் மத்தியில் லீ மீண்டும் பேசினார்.

அப்போது, உடலில் இருந்து நீர்சத்து வெளியேறிவிட்டதால் தனக்கு சிறிய அளவில் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் எனக்காக காத்திருந்த மக்களுக்கு நன்றி நன்றி, நான் அனைவரையும் பீதி அடைய செய்து விட்டேன். தற்போது உடல்நலமாக இருக்கிறேன். என்னை சுற்றி டாக்டர்கள் பலர் இருக்கிறார்கள். எனது உடல் நிலையை பரிசோதித்து கொள்ள விரும்புகிறேன். என்றார்.

பிரதமர் லீ கடந்த 20 ஆண்டுகளாக நிண நீர் திசுக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டார். மேலும் கடந்த ஆண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது சிங்கப்பூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2-ந் தேதி அமெரிக்கா, சென்று இருந்த போது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போதும் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்களின் சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago