முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்த்தசாரதி கோவிலில் யோகநரசிம்ம சன்னதியில் கும்பாபிஷேகம்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள நரசிம்மர் சாமி சன்னதியில் மகா சம்ப்ரோஷணம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் மற்றும் அதன் விமானங்கள், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி ரூ.95 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்தன.முதல் முறையாக நரசிம்ம சாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திர வரதராஜ சாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட உள்ளது. தற்போது திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைதொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு பஸ் வசதிகள், குடிநீர் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் காண கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் அகண்ட திரை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டன. கோவில் வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. காவல்துறை, சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை ஆகியோருடன் இணைந்து பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையதுறை அரசு செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர்(திருப்பணிகள்) கவிதா, இணை ஆணையர்கள் பரஞ்ஜோதி, தனபால், அன்பழகன், காவேரி, கோவில் துணை ஆணையர்(பொறுப்பு)ஜோதிலெட்சுமி, உதவி ஆணையர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று காலை யாகசாலை பூஜைகளை பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்