முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:-

அன்புமணி ராமதாஸ்:

கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பிரான்ஸ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது நடிகர் நண்பர் கமலஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.நடிப்பை பிழைப்பாக கருதாமல் மூச்சாக கருதும் நண்பர் கமலஹாசனுக்கு இன்னும் பல பெருமைகள் காத்திருக்கின்றன. சிறந்த மனித நேயரும், சமூக அக்கறையாளருமான கமலஹாசன் ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்

ஜி.கே.வாசன்:

தனது நடிப்புத்திறமையால் அனைவர் உள்ளங்களையும் கவர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பன்முகத்திறன் கொண்டவர். அவருக்கு சென்ற 1997 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. அவருடைய கலையுலக வாரிசாகக்கருதப்படும் கமல் ஏற்கனவே ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் பெற்றிருக்கும் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது அவருக்கு மென்மேலும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். அவர் மேலும் கலைப்பணிகள் செய்து பல்வேறு சாதனைகள் படைக்க தனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago