முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவாளிகள் என சந்தேகம்:ஈராக்கில் 40 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சுட்டுகொலை

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத்  - ஈராக் நாட்டின் மோசூல் உள்ளிட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அரசின் உளவாளிகள் என்று சந்தேகித்து அப்பாவி பொதுமக்கள் 40 பேரை தலையில் சுட்டு படுகொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் விமானப்படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே, இந்த தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பிணைக் கைதிகளின் தலைகளை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும், சுட்டுக்கொன்றும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரில் உள்ள மக்களை அங்கிருந்து தப்பிக்க உதவிய அரசின் உளவாளிகள் என்று சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி பொதுமக்கள் 40 பேரை நேற்று முன்தினம் தலையில் சுட்டுக் கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியலுடன் மேற்கண்ட 40 பிரேதங்களும் மொசூல் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago