முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை  - பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர்  கமல்ஹாசனுக்கு வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருக்கிறார்.50 ஆண்டுகள் திரைத்துறையில் காலடி பதித்துள்ள  அவர் 4 முறை தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி காந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,”  எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்”  என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்