முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: சிரியா தூதர் கருத்து

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

டமஸ்கஸ்  - காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியாவிற்கான சிரியா தூதர் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் நேற்று முன்தினம்  சிரியா தலைநகர் டமஸ்கஸுக்கு சென்றார். அங்கு சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாதை சந்தித்தார். சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கி நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இந்தியா சார்பில் முதல் முறையாக மந்திரி ஒருவர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் அக்பர் மற்றும் சிரிய அதிபர் இடையிலான சந்திப்பு குறித்து இந்தியாவிற்கான சிரிய தூதர் ரியாத் அப்பாஸ் கூறியதாவது.,

சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவும், சிரியாவும் ஒரே கட்டத்தில் உள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவுக்கும், சிரியாவுக்கும் இடையே வரலாற்று பூர்வமான உறவு இருந்து வருகிறது. சர்வதேச நிலைமைகள் மாறியுள்ளதை தொடர்ந்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து பல்வேறு நாடுகள் விலகி உள்ளன. சிரியாவின் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அக்பரின் பயணம் இருநாடுகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இருநாடுகளும் தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்