முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவின் கழிப்பறை கொள்கைக்கு அமெரிக்க கோர்ட் திடீர் தடை

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - மாற்றுப் பாலின மாணவ - மாணவியர் தற்போதைய தங்களது பாலின அடையாளத்தின்படி கல்விக் கூடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவது தொடர்பான அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான அரசின் உத்தரவுக்கு டெக்சாஸ் மாநில கோர்ட் தடை விதித்துள்ளது. பிறவியிலேயே ஆணாக இருந்து பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெண்ணாக மாறியவர்களும், பிறவியிலேயே பெண்ணாக இருந்து பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆணாக மாறியவர்களும் மாற்றுப் பாலினத்தவர் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

வடக்கு கரோலினா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்கள் பிறப்பின்போது இருந்த பாலியல் தகுதியை புறந்தள்ளி, சமீபத்தில் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ..? அதற்கேற்ப, ஆண் என்றால் ஆண்களுக்கான கழிப்பறையையும். பெண் என்றால் பெண்களுக்கான கழிப்பறையையும் இனி அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்த புதிய சட்டம் கூறுகிறது. இதற்கு, வடக்கு கரோலினா மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இதுதொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அமெரிக்க அரசின் கல்வி மற்றும் நீதித்துறை அமைச்சகங்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அனைத்து கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ - மாணவியரை பிறப்புரீதியாக இல்லாமல் தற்போதைய உடல் கூறியிலின்படி தாங்கள் விரும்பும் கழிப்பறைகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை எதிர்த்து டெக்சாஸ் மாநில அரசின் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. நாட்டின் தலைமையான வாஷிங்டன், தங்களது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக டெக்சாஸ் குற்றம்சாட்டியுள்ளது. பல மாநில அரசுகளும் இவ்வழக்கில் மனுதாரர்களாக இணைந்துள்ளன.

இதுதவிர, மேலும் பத்து மாநிலங்கள் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்துள்ளன. டெக்சாஸ் மாநிலம் தொடர்ந்த வழக்கை விசாரித்துவந்த டெக்சாஸ் வடக்கு மாவட்ட நீதிபதி ரீட் ஓ’கொன்னோர், மாற்றுப் பாலினத்தவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்