முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க சிறப்பு ரெயில் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க சிறப்பு ரெயில் 28-ந்தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது.இந்தியன் ரெயில்வேயும் இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வாகனமும் இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரெயில் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு ஆன்மீக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக ஷீரடிக்கு தனி ரெயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில் 28-ந்தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது.ஷீரடியில் சாய்பாபா, பண்டரிபுரத்தில் பாண்டு ரங்கன், மந்த்ராலயத்தில் ராகவேந்தர் ஆகிய மகான்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.7 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு 2-ம் வகுப்பு படுக்கை கட்டணமாக ரூ.5855 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரெயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி., எல்.எப்.சி. வசதிகளை பெறலாம்.இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago