முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக ராஜ்நாத்சிங் இன்று பயணம்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கடந்த 46நாட்களாக வன்முறையில் சிக்கி தவிக்கும் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று( புதன்)  அங்கு செல்கிறார். அவர் அந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நிலைமை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஆலோசனை நடத்துகிறார்.

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி  புர்கான் வானி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்  கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து, அந்த பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினை வாதிகள் வன்முறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதமாக வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இவர்களில் இரு போலீஸ் காரர்களும் இறந்துள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினை இந்தியா முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த  நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில எதிர் கட்சி தலைவர்கள் , முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது காஷ்மீரில் அமைதி நிலவ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.  காஷ்மீரில் அமைதி ஏற்பட உரிய பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றும்  பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

காஷ்மீரில் வன்முறையை பாகிஸ்தான் தூண்டி விடுவதுடன் தீவிரவாதத்தையும் ஆதரிக்கிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை ,இதில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

 ஜம்மு காஷ்மீர் மாநில எதிர் கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்த மறுநாளே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக இன்று செல்கிறார். அங்கு அவர் அனைத்து தரப்பு மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கிறார். காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங் கூறுகையில், காஷ்மீருடன் உணர்சிப்பூர்வமான உறவை விரும்புகிறோம். அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்