முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் - பலுசிஸ்தான் பிரச்சினைக்கு 3வது நாடு தீர்வு காண முடியாது: அமெ.தூதர்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

புதுடெல்லி, காஷ்மீர் , பலுசிஸ்தான் பிரச்சினைக்கு 3வது நாடு தீர்வு காண முடியாது என்று டெல்லியில்  அமெரிக்க தூதர்   ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இந்த பிரச்சினையில் பாகிஸ்தான் அடிக்கடி தலையிட்டு வருகிறது. இது குறித்து, அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,

காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான் பிரச்சினைக்கு இந்தியா, பாகிஸ்தானை தவிர 3வது நாடு தீர்வு காண முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு இந்த இருநாடுகள்தான் தீர்வு காண வேண்டும். தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. இதில் இந்தியாவைப்போன்று அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலால் அமெரிக்க மக்கள் பெரும் அதிர்சிக்குள்ளானார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்