முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைப்பிரதேச மாணவர்களுக்காக ரூ.8 கோடியில் மழைக்கோட்டு – பூட்ஸ் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ 8 கோடி செலவில் மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழை காலங்களிலும் எவ்வித சிரமுமின்றி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் கூடுதலாக மழைக்கோட்டு , பூட்ஸ்மற்றும் காலுறைகள் வழங்கப்படும். என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ்  முதலமைச்சர் ஜெயலலிதாஅறிக்கைகள் வருமாறு:

சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் உயர்வடைய அவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். கல்வியே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாகும். எனவே தான், எனது தலைமையிலான அரசு கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டதால், தற்போது தொடக்கப்பள்ளி வசதி சதவீதம் 98.30 ஆகவும், நடுநிலைப் பள்ளி வசதி சதவீதம் 99 ஆகவும் உள்ளது.

இதை மேலும் மேம்படுத்தும் வகையில், நடப்பாண்டில் 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். புதிதாக துவங்கப்படும் தொடக்கப் பள்ளிகளுக்கு 10 இடை நிலை ஆசிரியர் பணியிடங்களும், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 9 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், மாணவர் மற்றும் மாணவியருக்கென தனித்தனி கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் சமையலறை கட்டிடம் போன்ற உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும். இவை 28 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தேவைப்படும் பள்ளி கட்டிடங்கள், கூடுதல் வகுப்பபறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், சமையலறை, அறிவியல் ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள், கலை மற்றும்கைத்தொழில் அறைகள், கணினி அறைகள், நுhலக அறைகள் மற்றும் வகுப்பறைகள்பழுது சரிபார்த்தல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், 4,166 கோடி ரூபாய் செலவில்அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில்60 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள்ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் பகுதியிலும், எழில் நகர் பகுதியிலும் குடியிருப்புகள் வழங்கப்பட்டன. பெரும்பாக்கம் பகுதியில் உள்ள 564 பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் எழில் நகர் பகுதியில் உள்ள 1,127 பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது இல்லங்களின் அருகிலேயே கல்வி தொடரும் வகையில் இந்த குடியிருப்புகளில் தலா ஒரு தொடக்கப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் தொடங்கப்படும்.

சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம் வேலூர், கடலூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர் , தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் 7 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எளிமையாக பாடங்கள் பயிற்றுவிக்க எளிமைப்படுத்தப்பட்டல செயல்வழிக்கற்றல் அட்டைகள் வழங்கப்படும். இந்த திட்டம் ரூ 5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழை மற்றும் குளிர் காலத்தில் உடல் நலம் பாதிப்பு இன்றி பள்ளிக்கு சென்று வர ஏதுவாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரைஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கம்பளிச் சட்டை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாணாக்கர்கள் மழைக் காலங்களிலும் எவ்வித சிரமுமின்றி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் கூடுதலாக மழைக்கோட்டு , பூட்ஸ்மற்றும் காலுறைகள் வழங்கப்படும். இதற்கு 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.தொடக்கக் கல்வியின் போதே செயல்முறை மூலம் மாணாக்கர்கள் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் தாங்கள் வாழும் இடம், திசைகள், சுற்றுப்புறம், ஆறுகள், மலைகள், அட்ச ரேகை, தீர்க்க ரேகைபற்றி அறிந்து கொள்வதற்கான வரைபட பயிற்சித் தாள் வழங்கப்படும்.

அதே போன்று மாணவர்களின் கணித அறிவினை மேம்படுத்தும் விதமாக, 1 மற்றும் 2-ஆம் வகுப்புமாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் 38,030 அரசு மற்றும் அரசு உதவி பெறும்தொடக்கப் பள்ளிகளுக்கும், மேலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும்வகையில் 8,603 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணிதஉபகரணப் பெட்டிகள் வழங்கப்படும்.

மேலும், மாணாக்கர்களின் அறிவியல்அறிவினை ஊக்குவிப்பதற்காக 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் 24,103 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும், மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் 2,900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குஅறிவியல் உபகரணப் பெட்டிகள் வழங்கப்படும்;

அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் வாசித்தல் மற்றும்பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில்வாசிப்புத் திறன் மேம்பாட்டுக்கானபுத்தகங்கள் வழங்கப்படும். இவை 46 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

பள்ளிகளில் இணையதளம் வாயிலான கல்வியினை நடைமுறைப்படுத்த பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் விதமாக, 555 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணின¨வழிக் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 40,000 மாணாக்கர்கள் பயன்பெறுவர்.

8. அறிவியல் மற்றும் கணித பாடங்களில் உள்ள கடின பகுதிகளை எளிமையாக புரிந்து கொள்வதற்காகவும், புதிய தொழில் நுட்பங்களான தொடுதிரை, காணொலி காட்சி, பல்லூடகம் போன்றவைகளால் பள்ளியில் நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தல் முறைகள் மேம்படுத்துவதற்காகவும், பின்னணி குரலுடன் கூடிய அசைவூட்டும் காணொலி தொகுப்புகள், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வண்ணம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குவழங்கப்படும். இதனால் 22 லட்சம் மாணாக்கர்கள் பயனடைவார்கள்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின்அடிப்படையில் தொட்டுணர் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவுமுறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கென 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் வகையில், இலவச

கட்டாயக் கல்வி உரிமை சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம், பாலின கூர் உணர்வுவிழிப்புணர்வு, சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அனைத்துப்அரசுப் பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்படும். மாணவர்கள் புதிய முறையில் கல்விகற்பதற்கு ஏதுவாக வகுப்பறையில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச்சுவர் சித்திரங்கள் வரையப்படும். இதற்கென 11 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (வெர்சூவல் கிளாஸ் ரூம்கள் ) ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், 11 மைய ஆசிரியர்கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும்பெற்று மாணவர்கள் பயன் பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்தகோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம்உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்கென33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்