முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை திருப்பப் பெறுவதற்கான வழிகளை மத்திய அரசு காணவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா கல்லூரியில் புதியதாக திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் மத்தியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி என்று பிரகடனம் செய்யும் விதமாக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு எதுவுமின்றி இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்றாலும் இப்பகுதி மீட்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதற்கு ஒரு தீர்வை காணவேண்டும். பாகிஸ்தான் மற்றும் சீனா வசமுள்ள காஷ்மீர் பகுதிளை மீட்பதற்கான வழிகளை இந்தியா காண வேண்டும் என்று மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.  காஷ்மீர் பிரச்சினையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கிட்டத்தட்ட தீர்வு கண்டிருந்தார். அவர் கடைப்பிடித்த காஷ்மீர் கொள்கையை அவருக்கு பின்னால் வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடிக்கவில்லை.

அவ்வாறு கடைப்பிடித்திருந்தால் அங்குள்ள பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டிருக்கும் என்று கூறிய மோகன் பகவத் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு  "மோசமான ஆளுகை"யே காரணம் என்று குற்றம் சாட்டினார். பள்ளத்தாக்கில் வளர்ச்சியும் கிடையாது, வேலை வாய்ப்பை உருவாக்க வழிவகை எதுவும் செய்யப்படவில்லை. காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும், மோசமான ஆளுகையால் தனிமையை உணரும் காஷ்மீரிகளின் காயத்தை குணப்படுத்தவேண்டும்.

பாகிஸ்தானில் தினந்தோறும் என்ன நடக்கிறது என்பதை காஷ்மீர் மக்கள் அறிவார்கள். அந்நாட்டுடன் செல்ல அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  இந்நிலையில் காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் நீடிப்பதற்கான சூழலை உருவாக்குவது அரசின் கடமையாகும் என்று மோகன் பகவத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago