முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஜிகா’ வைரசால் பாதிப்பு என சந்தேகம்: இந்திய தடகள வீராங்கனை சுதாசிங் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களுரு : ரியோவில் இருந்து திரும்பிய இந்திய தடகள வீராங்கனை சுதாசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ‘ஜிகா வைரஸ்’  பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகத்தின் பெயரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவரான சுதாசிங் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் இருந்தபோதே லேசான உடல்நிலை பாதிக்கப்பட்டார். நாடு திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரேசில் நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் நோய் உள்ளது. இந்த வைரஸ் சுதாசிங்கையும் தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த ரத்த சோதனை நடத்தப்படுகிறது. சுதாசிங்கை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து  வருகிறார்கள். கர்நாடகா சுகாதார குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. மேலும்  ரியோவில் இருந்து திரும்பிய மேலும் 2 தடகள வீராங்கனைகளும் காய்ச்சலுடன் நாடு திரும்பி உள்ளனர். ஒ.பி.ஜெய்ஷா (கேரளா), கவிதா ரவூத் (மராட்டியம்) ஆகியோருக்கு காய்ச்சல் இருந்தது. அவர்களின் உடல்நிலை தேறியதால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

மருத்துவமனைக்கு சென்ற மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் சிங்கிற்கு மருத்துவ வசதி அனைத்தையும் செய்துக் கொடுக்க கேட்டுக் கொண்டனர். இதற்கிடையே, ஆபத்து காரணிகளை தவிர்க்க இரத்த மாதிரிகளை டாக்டர்கள் எடுத்து உள்ளார். சுதாசிங் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார் என்று நம்புகிறோம் என்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல இயக்குநர் எம் ஷியாம் சுந்தர் கூறிஉள்ளார். இதற்கிடையே டாக்டர்கள் சுதா சிங் குணமாகிவருகிறார், அவர் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததைவிட இப்போது அவருடைய உடல்நிலை முன்னேற்றம் கண்டு உள்ளது என்று கூறிஉள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்