முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவின் வாரணாசி பயணத்துக்கு பதிலடி: அமேதியில் பிரச்சாரத்திற்காக மோடியை களமிறக்க பா.ஜ.க வியூகம்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சோனியாவின் செல்ல தொகுதிகளாகக் கருதப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் பதிலடி பிரசாரத்துக்கு பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பணிகளில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் பிரசாரத்தை தொடர முடியவில்லை.

சோனியாவின் பிரசாரம் மீண்டும் நடக்காவிட்டாலும், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாரத்தை விறுவிறுப்பாக்க பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சோனியாவின் செல்ல தொகுதிகளாகக் கருதப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் பதிலடி பிரசாரத்துக்கு பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. இதற்காக அமேதி, ரேபரேலி தொகுதிகளின் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் சமீபத்தில் டெல்லி மேலிடத்துக்கு அழைத்து ஆலோசிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பிரதமர் மோடி அடுத்த மாதம் (செப்டம்பர்) உத்தரபிரதேசம் செல்கிறார். அமேதி தொகுதியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மற்ற மாநிலங்களை விட உத்தரபிரதேசத்தில்தான் அதிக பொதுக்கூட்டங்களில் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அது போல உத்தரபிரதேச சட்டசபை தேர்தலிலும் அதிக கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளில் பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் அவர் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்யும் போது மேலும் பல புதிய திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.பா.ஜ.க.வின் இந்த புதிய திட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் பிரியங்காவை பிரசாரம் செய்ய அழைத்து வரலாமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago