முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு சம்மன்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.  செப்டம்பர் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் விசாரணை குழு முன்னர் ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  புதிய ஆதாரங்கள் சில வெளியாகியுள்ளதையடுத்து நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திவரும் சாரதா சிட் பண்ட் நிறுவனம் பொது மக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.  இவ்வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 6-வது துணை குற்ற பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால், அவர் குற்றவாளியாகவோ, சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை. அதே சமயம், பணப் பரிவர்த்தனையில் நளினிக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக நளினி ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago