முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரும் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரும் வழக்கில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை நீக்கி மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த சுப்ரீ்ம்கோர்ட், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் அவசியம் குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து ஜல்லிக்கட்டுத் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.  வழக்கின் இறுதி விசாரணை இம்மாதம் 30ம் தேதி தொடங்கும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நேற்று கூடுதல் ஆவணங்களை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

500 பக்கங்கள் கொண்ட இந்த 4 ஆவணத்தொகுப்பை அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சுப்ரீம்கோர்ட் நிபந்தனைகளுடன், 2012, 2013 மற்றும் 2014ல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளின் விவரங்கள், நடந்த போட்டிகளின் விவரங்கள், 2014-க்குப் பிறகு ஜல்லிக்கட்டு மாடுகளின் நிலைமை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.உரிய வழிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கப்படும்போது அதனை முழுமையாக ஏற்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்