முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கர நிலநடுக்கம் எதிரொலி: இத்தாலியில் ஒரு நகரமே மாயம் மேயர் செர்ஜியோ பிரோசி கண்ணீர்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

ரோம்  - நில நடுக்க பாதிப்பில் சிக்கியுள்ள இத்தாலியில் ஒரு நகரமே இடிபாடுகளால் முழுமையாக மாயமாகிவிட்டது என்று அந்த நகர மேயரே கண்ணீரோடு கூறியுள்ளார். இத்தாலியின் மத்திய பகுதியை மையம் கொண்டு நேற்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவு கோலில் இது 6.2 என்ற அளவில் பதிவாகியிருந்தது. நில நடுக்கத்தால் அமட்ரைஸ் என்ற குட்டி நகரமே மாயமாகிவிட்டது.. எங்களை காப்பாற்றுங்கள்.. என்று, அதன் மேயர் செர்ஜியோ பிரோசி கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த நகரம், 2 ஆயிரம் மக்களை கொண்டது. லசியோ மண்டலத்தில் அமைந்துள்ளது.

அமட்ரைஸ் நகர மக்கள் ஒவ்வொருவரின் செல்போன் எண்களுக்கும் மீட்பு படையினர் கால் செய்கிறார்கள். மறுமுனையில் போன் எடுக்கப்படாவிட்டால் அடுத்த நம்பருக்கு போன் செய்கிறார்கள். போன் எடுக்கவில்லை என்றால் அந்த நபர் இறந்திருக்கலாம் என முடிவு செய்யப்படுகிறது. இந்த நகரின் அருகேயுள்ள அக்குமோலி என்ற மற்றொரு நகரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மூழ்கிக்கொண்டுள்ளோம்.. யாரையாவது உயிரோடு கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது என்று அந்த நகர மேயர் ஸ்டேபனோ பெட்ருச்சி கதறியுள்ளார்.

அமட்ரைஸ் நகரம், அமட்ரிசினா பாஸ்தா சாஸ் உணவுக்கு பெயர் பெற்றது. இவ்வாரத்தில் அங்கு உணவு திருவிழா நடைபெற்றது. எனவே சுற்றுலா பயணிகளும் பெருமளவுக்கு வந்திருந்தனர். எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago