முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் நில நடுக்கம்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்கம், பீகார், அசாம், ஒடிசா, திரிபுரா ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வின் காரணமாக மக்கள் பெரும் பீதியடைந்தார்கள்.

 மியான்மர் நாட்டில் நேற்று 6.7 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தின் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் பெரும் நில அதிர்வு ஏற்பட்டது. மேற்கு வங்கம், பீகார், அசாம்,ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நில அதிர்வின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பெரும் கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தார்கள்.  நில அதிர்வின் காரணமாக அங்கு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரிலும் கட்டிடங்கள் ஆடின. இதனால் அலுவலகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அவசரமாக வெளியே ஓடி  வந்தார்கள்.

 கொல்கத்தா, பீகார் தலைநகர் பாட்னா மற்றும் அசாம் தலைநகர் கவுகாத்தி ஆகிய இடங்களில் மக்கள் மிகுந்த பீதியில் இருந்தார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும் அலுவலகங்களில் இருந்தும் சாலைகளுக்கு ஒடி வந்தார்கள். நேற்று மாலை 4.04மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாலை நேரம் அந்த மாநிலங்களில் பதட்டமாகவே  இருந்தது.

 வட இந்திய மாநிலத்திலும்   உணரப்பட்டது. ஹரியானாவில் உள்ள குர்கான், மானேசர், மற்றும் போன்ட்சி ஆகிய இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி விவரம் தெரிய வில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்