முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், சீனா, தென் கொரியா கண்டனம்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

டோக்கியோ  - வட கொரியா கடலுக்கு அடியில் நடத்திய ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  வட கொரியா நேற்று கடலுக்கு அடியில் ஏவுகனை சோதனைநடத்தியது.  வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, இலக்கு 1000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் துல்லியமாக தாக்க கூடியவை என தென் கொரிய ஊடங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் வட கொரியாவின் ஏவுகணை சோதனையை சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அவசர சந்திப்பு கூட்டத்தில் பேசிய தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் யுன் பையுங் சே “இனியும் வட கொரியாவின் செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாது” எனக் கூறினார்.

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கிஷிடா கூறுகையில், "அண்டை நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலையை வட கொரியா உருவாக்கி வருகிறது. கூடிய விரைவில் உலக நாடுகளிடமும், ஜக்கிய நாடுகளின் சபையிடமும் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்