முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி பணம் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கில் திருப்பம்: ரயில் மேற்கூரையை வெட்ட பயன்படுத்திய ‘கட்டிங் பிளேடு’ கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளை யர்கள் பயன்படுத்திய கட்டிங் பிளேடு கிடைத்ததாக கூறப்படுகிறது.  சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதற்கான ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் தனி பெட்டியில் கொண்டுவரப்பட்டன. வழியில் மர்ம நபர்கள் சிலர், ரயிலின் மேற்கூரை யில் துளையிட்டு ரூ.5.75 கோடியை கொள்ளையடித்து சென்றுவிட்ட னர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வங்கி அதிகாரிகள், பார்சல் நிறுவன ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் என பலதரப்பு நபர்களிடம் விசாரணை நடத்தியும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு எந்தத் தடயமும் சிக்கவில்லை. இதனால், ரயில் சென்ற வழித்தடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நடந்தே சென்று சோதனை செய்தனர்.  இந்நிலையில், சேலம் அருகே ஒரு புதர் பகுதியில் இருந்து கட்டிங் பிளேடு ஒன்றை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதில், ரயிலின் மேற்கூரையை வெட்டியதற்கான தடயங்கள் இருந்துள்ளன. எனவே, கொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி கள் சேலத்தில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில், ரயிலின் மேற்கூரையை வெட்டுவதற்கு பயன்படுத்திய கட்டிங் பிளேடை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கண்டுபிடித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago