முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் இயல்பாக இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை : உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - காஷ்மீர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை என கூறியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
காஷ்மீர் மாநிலத்தில் புர்ஹானி வானி என் கவுன்ட்டரைத் தொடர்ந்து 48-வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநில முதல்வர் மெஹபூபா முப்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவர் காஷ்மீர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மெஹபூபாவுடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத்சிங், "இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்புகிறோம். காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு காஷ்மீர் இயல்பாக இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை.  வாஜ்பாயி வலியுறுத்திய காஷ்மீரியாத், இன்சானியாத், ஜம்மூரியாத் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் பன்முக கலாச்சாரம், மனிதநேயம், ஜனநாயகம் பாதிக்கப்படாத வகையில் யாருடன் வேண்டுமானாலும் இந்தியா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது.

அதேபோல், பெல்லட் துப்பாக்கிகளுக்கு இன்னும் சில நாட்களுக்குள் மாற்று கண்டுபிடிக்கப்படும். இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பித்துவிடும். அதன் பின்னர் பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்று காணப்படும்.  2010 அரசு அறிக்கையில் பெல்லட் துப்பாக்கிகள் அபாயகரமானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  பெல்லட் துப்பாக்கிகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதேவேளையில் காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெறும் போராட்டங்களில் மத்திய படையினர் 4000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஷ்மீர் பெரு வெள்ளத்தின்போது படையினர் செய்த உதவிகளை மறந்துவிடாதீர்கள். காஷ்மீரில் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். காஷ்மீரில் படுகொலைகளை யாரும் விருப்பமில்லை. சிறு குழந்தைகள்கூட கைகளில் கற்களை எடுத்து வீதிகளில் போராட வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்