முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை: திக்விஜய் சிங்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

மகாத்மா காந்தி கொலை தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தில் இருந்து சிறிதும் பின்வாங்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, "மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர் காந்தியின் கொலைக்குப் பொறுப்பு என்றுதான் கூறியதாகவும்" தெரிவித்தார்.

இதனையடுத்து ராகுல் காந்தி தனது கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாக சலசலக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ் தொடர்பாக தனது நிலைப்பாட்டிலிருந்து ராகுல் காந்தி சிறிதும் பின்வாங்கவில்லை. காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய நபரே என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். வெறுப்பும், வன்முறையும் நிறைந்த சித்தாந்தத்தின் வெளிப்பாடே காந்தி கொலை செய்யப்பட காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

வெங்கய்யா விமர்சனம்:
இதற்கிடையில் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்திக்கு ஞானம் பிறந்துவிட்டது. அவரது கருத்துகள் யு டர்ன் என்றாலும் அது ஒரு நல்ல திருப்பம். ஆர்எஸ்எஸ் ஒரு தேசபக்த அமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்