முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாய் கடி விவகாரம்: மேனகா காந்திக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் : கேரள தொழிலதிபர் ஆவேசம்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

நாய்கள் மீது காட்டப்படும் கருணை யால், மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார். இவ்விஷயத்தில் மேனகாவுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக, கேரள தொழிலதிபர் ஆவேசமாக கூறியுள்ளார். கேரளாவில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பதாக புகார் உள்ளது. மாநிலத்தில் 2.5 லட்சம் வெறி நாய்கள் சுற்றித் திரிவதாக வும், 2015-16-ம் ஆண்டில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெறி நாய் கடிக்கு ஆளானதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, வெறி நாய் கடி மருந்து, விநியோகத்தில் நாட்டி லேயே முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது. திருவனந்தபுரத்தில் சிலுவம்மா என்ற 65 வயது பெண் கடந்த வாரம் புல்லுவிளை கடற்கரை பகுதிக்கு சென்ற போது, நாய்களிடம் சிக்கி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுபோல பல மரணங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ள நிலை யில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை மற்றும் விஷ ஊசி செலுத்திக் கொல்ல மாநில அரசு முடிவு செய்தது.

இவ்விவகாரம் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், விலங்கின ஆர்வலருமான மேனகா காந்தி ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘சிலுவம்மா இறந்தது வருந்தத்தக்கது. அதற்காக, அப் பகுதியில் நாய்களை எல்லாம் அடித் துக் கொல்ல வேண்டும் என்பது முட்டாள்தனம். அந்த பெண், கடற்கரைக்குச் செல்லும் போது, இறைச்சி ஏதேனும் கொண்டு சென்றிருப்பார். நாய்கள் எப்போதும் காரணமின்றி துரத்தாது, கடிக்காது’ என்றார். நாய் தொல்லைக்கு எதிராக போராட்டங்கள் பலவற்றை நடத்தி வருபவரும், கேரள தொழிலதி பருமான கொச்சோசெஃப் தாமஸ் சிட்டிலபள்ளி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘குழந்தைகள் மற்றும் பெண் கள் மேம்பாட்டு அமைச்சகத் துக்கு மேனகா காந்தி பொறுப் பேற்றிருப்பது வெட்கக்கேடானது. இப்படி பேசியதற்காக, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஊடகங்கள் அவரை புறக்கணிக்க வேண்டும். அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என யாருக்கும் புரியவில்லை’ என, தாமஸ் கூறினார். மாநில அரசின் நாய் ஒழிப்பு முடிவுக்கு எதிரான நடவடிக்கை யில், இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் ஆர்.எம்.கார்ப் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது கேரளா அதி காரிகளிடையே அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்