முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாபவன் மணி வழக்கில் நீடிக்கும் மர்மம்: உதவியாளர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

சாலக்குடி  - நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து, கேரள மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், மணியின் உதவியாளர்கள் 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் கலாபவன் (45), கடந்த மார்ச் 6-ம் தேதி கொச்சி மருத்துவமனையில் இறந்தார். சாலக்குடி அருகே உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது, திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மார்ச் 4-ம் தேதி கொச்சி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிக்சை பலனின்றி இறந்தார்.

அவரின் உடலில் விஷத் தன்மை கொண்ட வேதியியல் பொருட்கள் இருந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டதால், கலாபவன் மணி இயற்கையான முறையில் மரண மடைந்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சாலக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணியின் உடலில் பூச்சிக் கொல்லி மருந்து இருந்ததை தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்த பின்பும், மணி எப்படி இறந்தார் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், மணியுடன் எப்போதும் நெருக்கமாக இருந்து வந்த 6 பேர் மீது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து, அவர்களிடம் உண்மை கண்டறி யும் சோதனை நடத்த நீதிமன்ற அனுமதியை போலீஸார் கோரி யிருந்தனர். இதற்கு சாலக்குடியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை விரைவில் நடத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்