முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா - ஹிலாரியின் கொள்கைகளால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டிரம்ப் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ஒபாமாவும், ஹிலாரியும் தங்களது கொள்கைகளுக்காக அமெரிக்காவின் பாதுகாப்பை தியாகம் செய்துவிட்டனர் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக கடந்த 24-ம் தேதியன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் தலைநகரான ஜாக்சனில் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேசியதாவது, “அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனும் பின்பற்றி வரும் வெளியுறவு கொள்கைகள் மூலம் நமது வேலை வாய்ப்புகளை பிற நாடுகள் எடுத்து கொண்டன. திறந்தவெளி வணிகம் நமது சிறுத்தொழில் முனைவோரை நசுக்கி விடும்.

இஸ்லாமிய பயங்கரவாதம் நமது கடற்கரை வரை பரவியுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்க தற்போது எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில்தான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தபோது பிரிட்டனும் இருந்தது. அமெரி க்காவின் வரலாற்றை எடுத்து பார்த்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஹிலாரி கிளிண்டன் என்றுமே தவறான பக்கத்தில்தான் இருந்திருக்கிறார்.

மேலும் ஹிலாரியின் தற்போதைய விருப்பம் அமெரிக்காவை உலகமயமாக்கலின் பிடியில் சரணடைய செய்வதாக உள்ளது. ஹிலாரி மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க எண்ணம் கொண்டிருக்கிறார். ஹிலாரி வேலை வாய்ப்புகளற்ற அமெரிக்கவை உருவாக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், நான் நமது நாட்டின் பாதுகாப்புக்காக நாட்டு மக்களின் வேலை வாய்புக்காகவும் தொடர்ந்து போராடுவேன்.

நமது நாட்டின் அரசாங்கமும், ஊடங்களும் மக்களின் உண்மை பிரச்சினையை தொட மறந்துவிட்டன.. அமெரிக்காவுக்கான புதிய வெளியுறவு கொள்கைகள் உருவாக்குவற்கான காலம் வந்துவிட்டது. நம்பிக்கையும் நல்ல நோக்கமும் கொண்ட நாடுகளுடன் அமெரிக்கா நட்பு பாராட்ட தயாராக உள்ளது. என்னிடம் பயங்கரவாதிகளிடம் கூறுவதற்கு ஒர் செய்தி உள்ளது. நீங்கள் எங்களது குடிமகன்களை கொன்றால் நாங்கள் உங்களை அழிக்காமல் விட மாட்டோம். நாங்கள் கருத்து மோதல்களுக்கு தயாராக இருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்