முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களுக்கு 70 சதவீத ஹெச்-1பி விசா வழங்கப்பட்டுள்ளது : அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவில் பணிபுரிவதற்கு வெளி நாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1 பி விசா மிக அதிக அளவில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிஷேல் பாண்ட் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் தங்கி பணி யாற்ற உலக அளவில் பல நாட்டினருக்கும் வழங்கப்படும் இந்த விசாவில் 70 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  இந்தியா வந்துள்ள அவர், குறிப்பாக தற்போதைய அதிபர் ஒபாமா அரசின் கொள்கைகள் இதற்கு முன்பிருந்த அரசின் கொள் கைகளை தொடரவே விரும்புகிறது என்றும் சுட்டிக் காட்டினார்.

வெளியுறவுத்துறை அமைச்சக ஏற்பாட்டில் ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் அமைச்சர்கள் நிலை யிலான கூட்டத்தில் பாண்ட் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் இத்தக வலைத் தெரிவித்தார். குறிப்பாக அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2015 வரையினான காலகட்டத்தில் 11,000 இந்தியர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். உலக அளவில் வழங்கப்பட்டுள்ள ஹெச்1பி விசாவில் இது 70 சதவீதம் என்றும் பாண்ட் கூறினார்.

இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இந்திய தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார். உலக அளவில் அமெரிக்கா வழங்கியுள்ள எல்-1 விசாவில் 30 சதவீத விசாவை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என்றும் மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். எல்-1 விசா காலம் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையானதாகும். இது ஒவ்வொரு நாட்டினருக்கும் மாறுபடும். இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்