முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய விமான சோதனை ஓட்டத்தின் போது விபத்து

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  - உலகின் மிகப்பெரிய விமானம் விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. டெலிபோன் கம்பத்தில் மோதியதாக லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 92மீ நீளமுள்ள இது, பகுதி-விமானம், பகுதி-ஹெலிகாப்டர், பகுதி-ஏர்ஷிப் வகையறாவைச் சேர்ந்தது.  நேற்று தனது 2-வது வெள்ளோட்டத்தின் போது கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்டுஷயரில் டெலிபோன் கம்பத்தில் மோதியது.

“விமானம் நன்றாகவே பறந்தது, தரையிறக்கும் போதுதான் இது நடந்தது” என்று இந்த 33 மில்லியன் டாலர் விமானத்திற்குப் பின்னணியில் உள்ள ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  விமானத்தில் பயணம் செய்த ஊழியர்கள் பாதுகாப்பாக தரையிறங்கினர், காயங்களும் இல்லை.

ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த விமானத்தின் முதல் வெள்ளோட்டம் அபாரமாக அமைந்தது. இந்த விமானத்தின் சிறப்பம்சம் என்னவெனில் தரையிலிருந்து புறப்பட மட்டும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு 92 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியது இந்த விமானம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்