முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை விரைவான வளர்சிக்கு சட்டங்களை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு சட்டங்களை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 தலைநகர் டெல்லியில் நிதி ஆயோக் சார்பில் நேற்று இந்தியாவை மாற்றுவோம் என்கிற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,

 மாற்றத்திற்கான சவால்களை இந்தியா சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது காணப்படுகிற வளர்ச்சி போதுமானது அல்ல. சாதாரண மாற்றத்தில் இருந்து முழு வளர்ச்சியை பெற வேண்டும். இந்தியா வேகமாக வளர வேண்டும் என்பதுதான் எனது இலக்காக உள்ளது. படிப்படியாக வளர்ச்சி அடைய வேண்டும் என நான் கருத வில்லை. 19ம் நூற்றாண்டின் நிர்வாகத்தை கொண்டு நாம் இந்தியாவினை பெருமளவில் மாற்றம் செய்ய முடியாது.

தேவையில்லாத நடைமுறைகளை நாம் நீக்க வேண்டும். நடைமுறைகளை விரைவுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்களுக்கு உரிய அனுபவங்களை பெற்றுள்ளன- தனி நபர்களாக நாம் புத்தகங்களை படிப்பதன் மூலமாகவும், கட்டுரைகளை படிப்பதன் மூலமாகவும் புதிய சிந்தனைகளை பெற முடியும்.  புத்தகங்கள் நமது மனதின் ஜன்னல்கள் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்