முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரும் வன்முறை சம்பவங்களை கையாள காஷ்மீரில் பாதுகாப்பு படையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்: மாநில பா.ஜனதா வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடரும் பிரச்சினையை கையாள பாதுகாப்பு படையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று மத்திய அரசை அம்மாநில பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சாத் சர்மா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினோம், அவரிடம் வழங்கிய குறிப்பாணையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இப்போது ஏற்பட்டு உள்ள சூழ்நிலையை கையாள பாதுகாப்பு படையை சுதந்திரமாக செயல்பட விடவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்,” என்று கூறினார். காஷ்மீரியத், ஜம்உரியத் (ஜனநாயகம்), இன்சானியத் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

”மாநிலத்தில் உளவுத்துறை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம், பொது ஊர்வலங்களில் பயங்கரவாதிகள் கலந்துக் கொள்ள அனுமதிக்க கூடாது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சட்டவிரோத பணம் மாநிலத்திற்கு வருவதை தடுக்கவேண்டும். அனைத்து பாதுகாப்பு முகமைகள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும், காஷ்மீரில் வாழும் சிறுபாண்மையினருக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவேண்டும்,

காஷ்மீர் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவேண்டும், ஜமாத் இ இஸ்லாமி போன்ற இயக்கங்களை கண்காணிப்பின் கீழ் வைக்கவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திஉள்ளோம்,” என்று சாத் சர்மா கூறி உள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியை கொண்டுவருவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் தேவையென்று பா.ஜனதா நினைக்கிறது என்ற அவர், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தினால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தியதை வரவேற்பதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்