முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. ஜனவரி முதல் மே மாதம் வரை ஒரு பருவமாகவும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மற்றொரு பருவமாகவும் வெங்காயம் அறுவடை செய்யப்படுகிறது. முதல் பருவ வெங்காயம் தற்போது விற்பனையில் உள்ள நிலையில் 2-வது பருவவெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ளது.

முதல் பருவ வெங்காயம் டன் கணக்கில் விற்காமல் தேங்கி உள்ள நிலையில் 2-வது பருவ வெங்காயம் விற்பனைக்கு வர உள்ளதால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 1 கிலோ வெங்காயம் 5 ரூபாய்க்கு விற்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திராவில் இருந்து 600 டன் வெங்காயமும், மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர், சோலாப்பூர், புனே பகுதிகளில் இருந்து 300 டன் வெங்காயமும் வருவதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது:-

ஆந்திரா வெங்காயம் சிகப்பாக சைஸ் சிறியதாக இருக்கும். மகாராஷ்டிரா வெங்காயம் பெரியதாக இருக்கும். விளைச்சல் அதிகம் என்பதால் ஆந்திராவில் 2 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயத்தை விற்கிறார்கள். சென்னைக்கு இதை லாரியில் கொண்டு வரும் போது வாடகையை சேர்த்து 7 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது என்றார்.  ஆனால் தென்மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம் ) கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இன்னும் குறையவில்லை. என்று மேலும்,அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்