முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரம் வரை ஊக்கத்தொகை: 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

சென்னை, விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை வரும் 10-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

 2015-16-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் தகுதியுடைய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் மாணவர் அல்லாதோர்களிடமிருந்து எஸ்.டி.ஏடி ஊக்க உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கான ஊக்க உதவித்தொகை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர் அல்லாதோரு்க்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13 ஆயிரம் ஆகவும்  வழங்கப்பட உள்ளது.

1-7-2014 முதல் 30-6-2015 முடியவுள்ள காலக்கட்டத்தில் விளையாட்டுத்துறையில் வெற்றிகளை பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் இதற்கான விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும்.

விண்ணப்பத்தினை அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத் தொகையினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தினை விண்ணப்ப விலையான ரூ.10 ஐ உறுப்பினர் செயலர் தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் பெயரில் அஞ்சல் ஆணையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிடையாக வரும் 10-ம் தேதிக்கு முன்னர் விண்ணப்பதாரரின் மாவட்டத்தின் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்