முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதம் பற்றி மட்டுமே பேச முடியும்: பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி கடந்த 19-ம் தேதி மத்திய அரசுக்கு 2-வது முறையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்த மாத இறுதியில் இஸ்லாமா பாத்துக்கு வருமாறு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர், சவுத்ரிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கடிதத்தைப் பாகிஸ்தானுக் கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே சவுத்ரியிடம் வழங்கியதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  அந்தக் கடிதத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யில் சட்டவிரோதமாக முகாமிட் டுள்ள பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட் டுள்ளது. மேலும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்படும் தீவிர வாதம் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் இது குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த மாதம் என்கவுன்ட்ட ரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக அங்கு கலவரம் நீடிக்கிறது.  இந்நிலையில், பாகிஸ்தான் அரசு வானியை தியாகியாக சித் தரித்து அறிக்கை வெளியிட்டது. இதனிடையே, காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தான் தூண்டு தலே காரணம் என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago