முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசத் துரோக புகாரை தொடர்ந்து ரம்யா கார் மீது முட்டை வீச்சு

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

பெங்களூர்  - திரைப்பட நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா, “மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் சொல்வது போல பாகிஸ்தான் நரகம் கிடையாது. நல்ல நாடு” என அண்மையில் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து கர்நாடகாவில் பாஜக, பஜ்ரங் தளம், விஹெச்பி, ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடகு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விட்டல் கவுடா, இந்தியர்களின் உணர்வுகளை அவமதித்த ரம்யா மீது தேசத்து ரோக வழக்கு பதிவு செய்யக் கோரி சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் ம‌னு தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவதற்காக மங்களூரு அருகேயுள்ள கதிரிக்கு ரம்யா சென்றார். அங்கு ரம்யாவை கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா, மாலையில் மங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த இந்துத்துவா அமைப் பினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ரம்யா மன்னிப்பு கேட்கக் கோரி போராட்டம் நடத்தியதால் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக் காரர்களை கலைத்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தை நெருங்கிய ரம்யாவின் காரை பின் தொடர்ந்து வந்த இந்துத்துவ அமைப்பினர் சிலர், அவரது கார் மீது மூட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால் ரம்யாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சிலரை பிடித்து மங்களூரு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்