முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016
Image Unavailable

சென்னை, சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

22-ம் தேதி இயற்கை எய்திய சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர் நாதன் மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் கீழ்க்கண்ட இரங்கல் செய்தியை பதிவு செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22-ம் தேதி சிங்கப்பூரில் மறைந்த அந்தநாட்டின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக அரசின் சார்பில் மேற்கண்ட இரங்கல் செய்தி இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago