முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ரூ.72 கோடி மோசடி புகார் : எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கைது

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பட அதிபர் மதன் மாயமான விவகாரத்தை தொடர்ந்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் ரூ.72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் என்னும் பச்சமுத்துவை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று  கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மீது மோசடி செய்ததாக சட்டப்பிரிவு 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கை மோசடி செய்ததாக ஐ.பி.சி. 406 மற்றும் ஐ.பி.சி. 34 ஆகிய பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும், பெற்றோர்களும் பாரிவேந்தர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே மதனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன்பேரில், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். மதன் மாயமான வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், 'எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 111 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், 'பாரிவேந்தரிடமும் விசாரணை நடத்தப்படும்' என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பாரிவேந்தருக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதன்பேரில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (பழைய கமிஷனர் அலுவலகம்) நேற்று மாலை பாரிவேந்தர் வந்தார். அவரிடம் போலீஸார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். மேலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக தலைவர் ரவி பச்சமுத்து, மதனின் நண்பர் ரங்கபாஷ்யம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அலுவலர் சண்முகம் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் என்னும் பச்சமுத்துவை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட அவர், மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago